அதானியிடம் மின்சாரம் வாங்கவில்லை- செந்தில் பாலாஜி

 
செந்தில் பாலாஜி

அதானி குழுமத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மின்சார வாரியங்களுக்கு  சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ரூ.2100 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதை மறைத்து, அமெரிக்காவில் முதலீடு திரட்டியது தொடர்பாக அதானி குழும நிறுவனங்கள் மீதும், அவற்றின் தலைவர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீதும் அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கில் அதானியை கைது செய்ய பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கும் அதானி நிறுவனத்துக்கும் கடந்த 3 ஆண்டுகளாக எந்த வணிக தொடர்பும் இல்லை. தமிழக மின்சார வாரியத்திற்கும் அதானி குழுமத்துடன் எந்த ஒப்பந்தமும் கடந்த மூன்று ஆண்டுகளில் போடப்படவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியம் ஒன்றிய அரசின்  Solar Energy Corporation மூலமாக மிக குறைந்த விலைக்கு (யூனிட் ரூ 2.61) மின்கொள்முதல் அதிமுக ஆட்சியில் யூனிட் ரூ 7 க்கு கொள்முதல் செய்யப்பட்டது. அதானி குழுமத்துடன், தமிழ்நாடு அரசு களில் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. அதானி குழுமமத்துடன் ஒப்பந்தம் போடப்பட்ட பல மாநிலங்கள் பெயர் உள்ளது, இதில் தமிழ்நாடு பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அவருடைய ஒப்புதலோடு தமிழக மின் தேவையை கருத்தில் கொண்டு மத்திய  மின்சார துறையுடன்  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1500 மெகா வாட் மின்சாரம் பெற ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. குறிப்பாக சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்ற மத்திய அரசு நிறுவனத்துடன் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசிடம்  யாரெல்லாம் உற்பத்தி செய்து வழங்கிகிறார்களோ அந்த வகையில் மத்திய அரசிடம் நேரடியாக  கொள்முதல்  செய்யப்பட்டுள்ளது. மிக மிக குறைந்த விலையில் அதாவது  ரூ.2.61 பைசாவுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதே அதிமுக ஆட்சியில் காலத்தில் 7 ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளனர்” என்றார்.