சம்பவம் நடத்தபோது சம்பவ இடத்திற்கு செல்லாமல், நானும் டிக்கெட் போட்டு சென்னைக்கு செல்ல வேண்டுமா?- செந்தில் பாலாஜி

 
ச் ச்

டிக்கெட் போட்டு சென்னைக்கு போகச் சொல்கிறீர்களா? செந்தில் பாலாஜி எப்படி உடனடியாக மருத்துவமனைக்கு வந்தார்? என எழுப்பப்படும் விமர்சனத்திற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “பரப்புரையில் அசம்பாவிதம் நடந்த தகவல் கிடைத்ததும், கட்சி அலுவலகத்தில் இருந்து உடனடியாக 7.47 மணிக்கு அமராவதி மருத்துவமனைக்கு சென்றுவிட்டேன். பாதிப்பு நடந்துள்ளது எனத் தெரிந்ததும் அங்கு செல்லாமல் டிக்கெட் போட்டு சென்னைக்கு போக சொல்கிறீர்களா? அரசு தனது கடமையை சரியாக செய்தது. ஆனால் அந்த அரசியல் கட்சி தனது கடமையை சரிவர செய்யவில்லை. விஜய் கூட்டத்திற்கு வந்தது கட்டுக்கடங்காத கூட்டம் இல்லை, கட்டுபாடற்ற கூட்டம். கூட்டம் நடத்தும்போது, எவ்வளவு மக்கள் கூடுவார்கள் என கணித்து அதற்கேற்ற இடத்தை தேர்வு செய்ய வேண்டியது ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பு. கரூர் லைட் அவுஸ் கார்னரில் அதிகபட்சம் 7000 பேர் நிற்கலாம், உழவர் சந்தை அருகே அதிகபட்சம் 5000 பேர் கூடலாம்.

யாராலும் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு துயர சமப்வம் நடந்துள்ளது. எந்த அரசியல் கட்சியின் கூட்டமாக இருந்தாலும் இனி இதுபோன்று நடக்கக்கூடாது.  தமிழக அரசுடன் தோள் நின்ற அனைத்துக் கட்சியினருக்கும், அமைப்புகளுக்கும் நன்றி. கரூர் சம்பவத்தை நான் அரசியலாக பார்க்கவில்லை. யார் மீது தவறு என பேசாமல் இனி இதுபோல் நடக்காமல் இருக்க முயற்சி எடுக்க வேண்டும். கூட்டநெரிசல் அதிகமாகும்போது, ஜெனரேட்டர் அறை தடுப்புகளை உடைத்து உள்ளே விழத்தொடங்கினர், அப்போதுதான் ஜெனரேட்டர்கள் ஆப் செய்யப்பட்டது. மணிப்பூரில் கலவரம் நடந்தபோது பாஜகவின் உண்மை கண்டறியும் குழு சென்றதா? குஜராத்தில் பாலம் இடிந்தபோது உண்மை கண்டறியும் குழு எங்க சென்றது?” என்றார்.