#Breaking "செந்தில் பாலாஜிக்கு தலை, காதுகளில் காயம்" - மாநில மனித உரிமை ஆணையம் தகவல்!!

 
tn

செந்தில் பாலாஜிக்கு தலை, காதுகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

 

tn

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.  இதன் முடிவில் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதையடுத்து அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படுவதன் காரணமாக அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதின் ரத்தக் குழாய்களில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக செந்தில் பாலாஜிக்கு உடனடியாக இதய  அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை பரிந்துரை செய்துள்ளது. அதேசமயம் செந்தில் பாலாஜியை 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

senthil balaji

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைதில் மனித உரிமை மீறப்பட்டதாக திமுக குற்றச்சாட்டி  உள்ள நிலையில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் அவரை நேரில் சந்தித்து இன்று விசாரணை நடத்தினார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த பின் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பேட்டி அளித்துள்ளார். அதில்,  அமைச்சர் செந்தில் பாலாஜி தலை, காதுகளில் காயங்கள் உள்ளன என்று மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தும் தான் துன்புறுத்தப்பட்டதாகவும்,  கீழே தள்ளி அமலாக்க துறையினர் தன்னை துன்புறுத்தியதாகவும் செந்தில் பாலாஜி வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.  தன்னை துன்புறுத்திய  அதிகாரிகளின் பெயர்களை செந்தில் பாலாஜி கூறியுள்ளார் என்றும் மனித உரிமை ஆணையர் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.