#Breaking செந்தில் பாலாஜியின் உடல்நிலை - காவேரி மருத்துவமனை நிர்வாகம் தகவல்

 
tn

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 

tn

இதுதொடர்பாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட  அறிக்கையில்,  தமிழக அரசின் மாண்புமிகு அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, 15 ஜூன் 2023 அன்று இதய நோய் அறிகுறிகளுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி முதன்மை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

tn

ஆரம்பகால கரோனரி ஆர்டரி பைபாஸ் கிராஃப்ட் (சிஏபிஜி) அறுவை சிகிச்சைக்கு ஆலோசனை வழங்கிய மூத்த ஆலோசகர் கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான எங்கள் நிபுணர் டாக்டர்கள் குழு அவரை பரிசோதித்தது. அவர் மயக்க மருந்துக்கான உடற்தகுதியை மதிப்பிடுவதற்கு மேலும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, மதிப்பீட்டின் அடிப்படையில், அறுவை சிகிச்சை திட்டமிடப்படும். அவர் தற்போது இதய கண்காணிப்புடன் ICU வில் சிகிச்சை பெற்று வருகிறார் மற்றும் பலதரப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளது.