செந்தில் பாலாஜி சற்று நேரத்தில் விடுதலை- ஸ்தம்பித்த புழல்

 
அக்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து விடுதலையாவது உறுதியானது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ரூ.25 லட்சம் இரு நபர் ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து செந்தில்பாலாஜியை விடுவிக்க முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து விடுதலையாவது உறுதியானது. இதனால் சற்று நேரத்தில் சென்னை புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலையாகிறார்.

Image


புழல் சிறையில் உள்ள செந்தில்பாலாஜியை வெளியே விடுவதற்கான பணியை சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் குவிந்துள்ளாதால் புழல் சிறையை சுற்றிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.