செப். 8ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

 
வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் கடைசி நாளான வரும் 8ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Image

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னையின் ஆலயம் அமைந்துள்ளது.  இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் ஆரோக்கிய அன்னைக்கு திருவிழா நடைபெறும். அதன்படி ஆகஸ்ட் 29ம் தேதி மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்ப்ரோஸ்,  மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ்,  உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோரால் புனித கொடி ஏற்றப்பட்டது. ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாளான 8ம் தேதி அன்னையின் தேர்பவனியும் நடைபெற இருக்கிறது.  இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா திருவிழாவையொட்டி வரும் 8ம் தேதி நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 7ம் தேதி இரவு தேர்பவனி, 8ம் தேதி மாதா பிறந்தநாள் விழா நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக வரும் 23ம் தேதி வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.