சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் : விஜயபாஸ்கரிடம் தீவிர விசாரணை!

 
ttn

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரி மற்றும் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, ,திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 43 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது , திருவேங்கைவாசல் உள்ள குவாரி மற்றும் வீடுகளில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

ttn

விஜயபாஸ்கர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2011 ஏப்ரல் மாதம் வரை பதவியில் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு பதவியை தவறாக பயன்படுத்தி அறக்கட்டளை தொடங்கி 14 கல்வி நிறுவனங்களை அவர் நடத்தி வருவதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ttn

அன்னை தெரசா பள்ளி ,அன்னை தெரசா பொறியியல், செவிலியர் கல்லூரிகள் என 14 கல்வி நிறுவனங்களை விஜயபாஸ்கர் நடத்தி வருகிறார்.  அத்துடன் 53 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார்,  40  லட்சம் மதிப்புள்ள85 சவரன் நகை, விவசாய நிலங்கள், பல நிறுவன பங்குகள், பதவி காலத்தில் டிப்பர் லாரிகள், சிமெண்ட் கலவை இயந்திரங்கள் ,ஜேசிபி இயந்திரங்கள் வாங்கியது மற்றும் மனைவி ,மகள்கள் பெயரிலும் சொத்துக்கள் வாங்கி குவித்தது உள்ளிட்ட பல தகவல்கள் முதல் தகவல் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள  முன்னாள் அமைச்சர்  சி.விஜயபாஸ்கர் வீட்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யாவிடம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இலுப்பூரில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் குவிந்தனர. சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடைபெற்று வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும். விஜயபாஸ்கருக்கு ஆதரவாகவும் ஆதரவாளர்கள் குவிந்தனர்.