ஏழு வயது சிறுவன் பூசாரி -தானே சமைத்து சாப்பிடவேண்டும்

 
க்

குலதெய்வ கோயிலில் இரண்டாம் வகுப்பு படித்த 7 வயது சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளதால், அச்சிறுவனின் கல்வி பாதிக்கப்படும் என்று தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது நீதிமன்றம்.

 நீலகிரி மாவட்டம் நெடுங்காடு கிராமத்தில் உள்ள படுகர் இன மக்களின் குல தெய்வமான கெத்தை அம்மன் கோயில் உள்ளது.    இங்கு பூஜை உள்ளிட்ட விழாக்களை அந்த இன மக்களே செய்து வந்தார்கள்.  

 கடந்த 1994ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.  அந்தக் கோயிலுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படித்த 7 வயது சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் .   இப்படி பூசாரியாக நியமிக்கப்பட்டு விட்டால் அந்த சிறுவன் பள்ளிக்கு செல்ல முடியாது உணவை அவரே சொந்தமாக சமைத்து சாப்பிடவேண்டும்.   கோயிலில் பசுக்களின் பாலை கலந்து நெய்யை எடுத்து விளக்குகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

ஹ்ர்

 இதனால் கல்வி கற்க வாய்ப்பே இல்லை .  இது கட்டாய கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானது .   ஆனால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்பு நல துறை அலுவலருக்கு மனு அனுப்பி இருந்தேன்.  ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தார்.

 இந்த வழக்கில் அவர் மேலும்,  இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாடு அரசின் சார்பில் முன்னிலையான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,   கோயில் மரபுப்படி சிறுவன் கோயிலை விட்டு வெளியில் வரக்கூடாது .  தமிழ்நாட்டில் வீடுதோறும் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார். 

 அதன்பின்னர் சிறுவனுக்கு கல்வி வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்து தமிழ்நாடு அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.   மேலும் இந்த வழக்கு 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.