"ஷாருக்கான் ஒரு துரோகி"...ஷாருக்கான் மன்னிப்பு கேட்க வேண்டும்; இந்து அமைப்புகள் கொந்தளிப்பு..!

 
1 1

ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாட்டில் இந்தி நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா அணியில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமான் ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளார். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடந்து வரும் நிலையில் கொல்கத்தா அணியில் விளையாட அந்த நாட்டு வீரர் சேர்க்கப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா செய்தி தொடர்பாளர் ஆனந்த் துபே கூறுகையில், “வங்கதேச வீரரை கொல்கத்தா அணியில் சேர்ப்பது நாட்டின் பாதுகாப்பு விவகராம் தொடர்புடையது. ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான், வங்கதேச வீரர்களை புறக்கணிக்க வேண்டும். ஷாருக்கான் வங்கதேச வீரரை விளையாட வைத்தால் அதனால் அவருக்கு கிடைக்கும் பணம் பயங்கரவாதத்தை வளர்க்கவும், நமது நாட்டுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டவும் பயன்படுத்தப்படும். எனவே நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். துரோகிகளை நாட்டுக்குள் விடமாட்டோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் உதவியை கேட்போம்” என்றார்.

இதுகுறித்து இந்து சாமியார் ஜகத்குரு ராம்பத்ராச்சார்யா கூறியதாவது:-
கொல்கத்தா அணியில் வங்கதேச வீரர் சேர்க்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. நடிகர் ஷாருக்கானின் மனநிலை எப்போதும் துரோகியின் மனநிலை போலவே இருந்துள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டிக்கிறேன். இந்திய அரசு அதை சகித்துக்கொள்ளாது. இந்த விவகாரத்தில் கடுமையான முடிவு எடுக்கும். இந்துக்களின் உதவியால் தான் வங்கதேசம் உருவாக்கப்பட்டது என்பதை அந்த நாட்டு அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினாா்.