மலேசியாவில் படிப்பதாக கூறி காதலனுடன் உல்லாசம்! பிணமாக பெற்றோர் கையில் கிடைத்த அவலம்

 
death death

மலேசியாவில் படிப்பதாக கூறி பெற்றோரை ஏமாற்றி மதுரையிலேயே காதலனுடன் குடும்பம் நடத்திய இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Death

மதுரை அனுப்பானடி தெய்வ கன்னி தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 75). இவருக்கு ஐந்து பிள்ளைகள் உள்ள நிலையில் ஐந்தாவது மகள் திவ்யா (வயது 28) எம்.எஸ்.சி படித்துள்ளார். திவ்யா மலேசியாவிற்கு சென்று மேல் படிப்பு படிப்பதாக  கூறியுள்ளார். மேலும் அது சம்பந்தமான ஆவணங்களை வீட்டில் காண்பித்து கிட்டத்தட்ட ஐந்து லட்சம் வரை வீட்டில் பணத்தை வாங்கிக் கொண்டு மலேசியா சென்றதாக புறப்பட்டுள்ளார். தர்மராஜ் தன் மகள் வெளிநாடு சென்று படிப்பதாக தர்மராஜ் பெருமையுடன் மற்றவர்களிடம் கூறியுள்ளார். 

இந்த நிலையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக திவ்யா தனது குடும்பத்தினருடன் whatsapp காலில் மட்டும் பேசியுள்ளார். மாத மாதம் திவ்யாவிற்கு அவரது குடும்பத்தினர் செலவிற்கு பணமும் அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் திவ்யா மலேசியாவுக்கு செல்லாமல் திருமணம் ஆகி குழந்தையுடன் மதுரையில் இருப்பதாகவும், கணவருடன் ஏற்பட்ட சண்டையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக அவரது குடும்பத்தினருக்கு போன் மூலம் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக தர்மராஜ் ஆஸ்டின் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் பிரகாஷ் என்பவரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

பிரகாஷ் கப்பலூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரகாசுக்கும் வித்யாவுக்கு திருமணமாகி தற்போது இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளதாகவும் இருவரும் திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் அடுத்துள்ள வெங்கல மூர்த்திநகர் பகுதியில் இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.இந்நிலையில் சமீப காலமாக திவ்யா பிரகாஷ் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த நவம்பர் 1ம் தேதி ஏற்பட்ட தகராறில்  பிரகாஷ் வெளியே சென்ற போது திவ்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், உடனடியாக அவரை மீட்டு மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பலனின்றி திவ்யா உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக தர்மராஜ் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகள் வெளிநாடு சென்றதாக நம்பி இருந்த பெற்றோருக்கு தனது மகள் திருமணம் ஆகி குழந்தையுடன் மதுரையிலேயே இருந்து வந்ததும் தற்போது கணவருடன் சண்டை காரணமாக இரண்டு வயது குழந்தையை தவிக்க விட்டு திவ்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.