நாகை அருகே இரட்டையர்களில் ஒருவருக்கு மட்டுமே SIR படிவம் வழங்கப்பட்டதால் அதிர்ச்சி

 
as as

நாகை அருகே இரண்டையர்களாக பிறந்தது தவறா? என்று நினைக்கும் வகையில், ஒருவருக்கு எஸ்ஐஆர் பதிவு செய்துவிட்டு, மற்றொருவரும் அவர் போல் உள்ளதாக கூறி, பதிவு செய்யாமல் விடுப்பட்டதால் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். 

நாகை மாவட்டம் நாகூர் கல்பண்டகசாலை தெருவை சேர்ந்தவர் அஸ்ரப்அலி. இவரது மனைவி பல்கிஷ். தம்பதியினருக்கு இக்ராமுல்லா, இஹ்ஸானுல்லா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். 2 பேரும் படித்துவிட்டு, தற்போது வெளியூரில் பணியாற்றி வருகின்றனர். இருந்தாலும் பூர்வீகமாக நாகூரில்தான் ஓட்டுப்பதிவு உள்ளிட்டவைகள் உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் இரட்டையர்கள் தங்களது ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது நடைபெற்ற சிறப்பு வாக்காளர் திருத்தப்பணி (எஸ்ஐஆர்) விண்ணப்பித்துள்ளனர். 2 பேருக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் இக்ராமுல்லாவுக்கு மட்டும் விண்ணப்பத்தை பதிவேற்றிவிட்டு, அவரது சகோதரர் இஹ்ஸானுலலாவுக்கு பதிவேற்றாமல் விட்டுவிட்டனர்.

இது குறித்து அவரது பெற்றோர் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டபோது, இரண்டு பேரும் ஒரே நபர்போல் உள்ளதால், அவருக்கு தனியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளனர். ஏற்கனவே இரண்டு பேரும் தனித்தனியாக வாக்காளர் அட்டையாள அட்டை உள்ளது என்றும், ஓட்டளித்துள்ளனர் என்றும், 2002 ஓட்டுப்பதிவிலும், இவர்களது பெயர்கள் உள்ளது என்று தெரிவித்தும், அலுவலர்கள் மறுத்துவிட்டனர். மேலும் எஸ்ஐஆர் விண்ணப்பிக்கும் கால அவகாசமும் நேற்றுடன் நிறைவடைந்துவிட்டது. தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் குடும்பத்தினர் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.