குடிமகன்களுக்கு ஷாக்..! மதுபானங்களின் விலை உயர போகிறது..!

 
1 1

ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை உயரும் சூழல் உருவாகியுள்ளது.

GST வரி சீர்திருத்தத்தால் பாட்டில்கள், மூடிகள் உள்ளிட்ட பேக்கேஜிங் பொருள்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி செலவு உயர வாய்ப்புள்ளது. 12 முதல் 15 சதவீதம் வரை இதற்கு முன்பு இருந்த வரி தற்போது 18 சதவீதமாக மாறியள்ளது. அதேபோல, போக்குவரத்து சேவைக்கான வரியும் 18 சதவீதம் என்பதால் இது மதுபானங்களின் விலையில் உள்ளடங்கும் சூழல் உருவாகியுள்ளது. 

தமிழக அரசின் டாஸ்மாக் சார்பில் 551 வகையான பிராண்ட்களின்   302 வகை மதுபானங்கள் விற்கப்படுகிறது. 26 பீர் வகைகள், 223 ஒயின்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 4,787 டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் 551 மது பிரண்டுகளின் சில்லறை விலையை ₹10 வரை உயர்த்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.தமிழ்நாட்டில் மதுபான விலை உயர இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.