நெகிழ்ச்சி சம்பவம்..! இஸ்லாமிய குடும்பத்திற்கு சீர் கொடுத்த இந்து மக்கள்..!

 
1

தமிழ்நாட்டில் இன்னும் மத நல்லிணக்கம் வாழ்ந்து கொண்டு தன இருக்கிறது. அதை சகோதர பாசத்தோடு வலுப்படுத்தி வருகிறார்கள் இந்துக்களும் இஸ்லாமியர்களும். இதனை மேலும் மெய்ப்பிக்கும் சான்றாக நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் இதோ 

தஞ்சை நாஞ்சிக் கோட்டை சாலையில் உள்ள குடியிருப்புகள் காலணியில் இஸ்லாமிய குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் இக்குடும்பத்தின் தலைவர் இறந்து விட்டார். இதனால், மிகவும் வறுமையான சூழலில் அக்குடும்பத்தினர் தவித்து வந்துள்ளனர்.அவரது வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த அந்த குடும்ப உறுப்பினர்கள் ரம்ஜான் பண்டிகையை கூட கொண்டாட முடியாமல் தவித்து நின்றனர். 

இவர்களது நிலைமையை புரிந்து கொண்ட அந்த காலணியில் வசிக்கும் இந்துக்கள் ஒன்று சேர்ந்து, இல்லாமிய குடும்பததில் உள்ள அனைவருக்கும் புத்தாடைகள், ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்களை வாங்கி சீர் வரிசையாக எடுத்து வந்து இஸ்லாமியர் குடும்பத்தினருக்கு வழங்கினார்கள்.பண்டிகை நாளில் கூட்டமாக சென்று சீர்வரிசையாக வழங்கி, தாங்களும் இணைந்து ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

இப்படி தமிழகத்தில் இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவர் என்ற பிரிவினையை யாராலும் செய்ய முடியாது என்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் சான்றாக உள்ளது.