விஜய் 'பத்து ரூபாய் பாலாஜி' என பேசியதும் வீசப்பட்ட செருப்பு- வைரலாகும் வீடியோ
விஜய் 'பத்து ரூபாய் பாலாஜி' என பேசியதும் தயாராக இருந்த தீய சக்திகள் செருப்பு வீசி தாக்கியதே கலவரத்திற்கு காரணம் என அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி தலைவர் கோவை சத்யன் குற்றம் சாட்டியுள்ளார்.

தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் குழந்தைகளும் சிறுவர்களும் உட்பட 39 பேர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாகவே உயிரிழந்ததும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள். பொதுமக்கள் விஜய்யின் பேச்சைக் கேட்க ஆவலுடன் காலையில் இருந்தே காத்திருந்த நிலையில், 12.00 மணிக்கே வந்திருக்க வேண்டிய விஜய் அவர்கள் 7 மணி நேரம் தாமதமாக வந்ததும், மக்கள் அதிகமாகக் கூடுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது. அதோடு , காத்திருந்த மக்களுக்கு தண்ணீர் உணவு மற்றும் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்யாததுதான் இந்த துயர சம்பவத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது.
செருப்பு வீசுற காட்சிக்கள் இடம் பெற்று உள்ளன. கண்டிப்பாக இது சமூக விரோதிக்கள் செய்யல் தான்
— Attacker TVK (@Ajay_fno) September 28, 2025
pic.twitter.com/b0iqKJNGUm
இந்நிலையில் கரூரில் தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவத்தில், அரசியல் நோக்கில் திமுக உண்மையை மறைக்க முயல்கிறது என்றும், விஜய் 'பத்து ரூபாய் பாலாஜி' என பேசியதும் தயாராக இருந்த தீய சக்திகள் செருப்பு வீசி தாக்கியதே கலவரத்திற்கு காரணம் என அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி தலைவர் கோவை சத்யன் குற்றம் சாட்டியுள்ளார். ஐயா அமைச்சரே... என விஜய் பேச தொடங்கிய உடன், அவர் மீது செருப்பு வீசப்படுகிறது. அதன்பின்னரே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஜென்செட் மர்மநபர்களால் உடைக்கப்பட்டது. அதன்பின் போலீஸ் தடியடி நடத்தப்பட்டுள்ளது. கூட்டம் நெரிசலில் சிக்கி இறந்ததாக தெரியவில்லை என்பது பொது மக்களின் புகாராக உள்ளது. அதற்காகவே சிபிஐ விசாரணை வேண்டுமென தவெக கோரியுள்ளது.


