அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

 
dpi

அரையாண்டு விடுமுறையில்  மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

school

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த 15ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு தொடங்கியது.  அரையாண்டு தேர்வு 15ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. 6, 8, 10, 12 ஆம் வகுப்புகளுக்கு காலையிலும், 7,9, 11 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்த சூழலில் அரையாண்டு தேர்வு இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.  அரையாண்டு தேர்வுகள் முடிந்த பின்னர் வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

School Education
இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறையின் போது சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் மட்டும் தரலாம் என்று பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.  அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.