ஒரே மாதத்தில் 2 முறை எடுக்கப்பட்ட EMI... ஸ்ரீராம் பைனான்ஸ் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
ஒரே மாதத்தில் இரண்டு முறை EMI எடுக்கப்பட்டதால் ஸ்ரீராம் பைனான்ஸ் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களிடம், இந்த மாதத்திற்கான EMI தொகை 2 முறை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. EMI தொகை நேற்று (பிப்.5) பிடித்தம் செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அதே தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. முன்னறிவிப்பின்றித் தொடர்ந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
2வது முறையாக EMI பணம் பிடித்தம் செய்யப்பட்டதாக தமிழகம் முழுவதும் இருந்து 1,214 புகார்கள் எழுந்துள்ளது. 2வது முறையாக பணம் பிடித்தம் செய்யப்படுவதற்கு மென்பொருள் கோளாறே காரணம் என்றும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் புகார்கள் மீது விசாரணை நடைபெற்றுவருவதாகவும் ஸ்ரீராம் பைனான்ஸ் விளக்கம் அளித்துள்ளது. 2-வது முறையாக பிடித்தம் செய்யப்பட்ட பணம் விரைவில் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப கிடைக்கும் எனவும் ஸ்ரீராம் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.


