மாஸ் லுக்கில் சிம்பு - தக் லைஃப் படக்குழு வெளியிட்ட வீடியோ!!

 
ttt

 ‘தக் லைஃப்’ படத்தில் சிலம்பரசன் நடிப்பதை  உறுதி செய்யும் வகையில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

tt

'நாயகன்' படத்திற்கு பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ளார் நடிகர் கமல் ஹாசன். இயக்குனர் மணிரத்னம் - கமல் ஹாசன் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தக் லைஃப். திரிஷா, அபிராமி, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட ஏராளமான ஒரு படத்தில் நடிக்கின்றனர்.  இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.  இப்படத்தில் கமல் ஹாசன் மூன்று வேடங்களில் நடிக்கிறார்.  ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறது.

இந்நிலையில் தக் லைஃப் படத்தில் சிலம்பரசன் நடிப்பதை படக்குழுவானது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரத்யேக போஸ்டரையும் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.  இப்படத்தில் சிலம்பரசன் கமல் ஹாசனுக்கு மகனாக நடிப்பதாக கூறப்படுகிறது.  சிலம்பரசனின் மாஸ் லுக் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  சமீபத்தில் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று லீக் ஆனது  குறிப்பிடத்தக்கது.