கஞ்சா வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் சினிமா பிரபலங்கள்!
கஞ்சா வழக்கில் நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் இணை தயாரிப்பாளர் சர்புதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை எல்டாமஸ் சாலையில் உள்ள சர்புதீன் வீட்டில் நடைபெறும் வார இறுதி நாட்கள் பார்ட்டியில் சினிமா பிரபலங்கள் கலந்துகொள்வது வழக்கம். அவ்வாறுகலந்துகொள்ளும் சினிமா பிரபலங்கள், மாடலிங் துறையில் உள்ளவர்களுக்கு கொக்கெய்ன், மெத்தம்பெட்டமைன், ஓசி கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்புதீன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து ரூ.27 லட்சம் பணம் மற்றும் 3 ஆப்பில் ஐபோன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிம்புவின் முன்னாள் உதவியாளர் சர்புதீன் போதை வழக்கில் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக, சர்புதீனின் வீட்டிற்கு வரக்கூடிய 18 பேர் கொண்ட பட்டியலை வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


