சிறந்த படங்களுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியல் வெளியானது! இந்தியர்களுக்கு பெறும் ஏமாற்றம்
ஆஸ்கர் சிறந்த படங்களுக்கான ஆஸ்கர் விருதின் இறுதிப் பரிந்துரை பட்டியலில் இந்திய படங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

98வது ஆஸ்கர் விருதின் சிறந்த திரைப்படத்திற்கான நாமினேஷன் பட்டியல் வெளியாது. ஆஸ்கர் சிறந்த படங்களுக்கான ஆஸ்கர் விருதின் இறுதிப் பரிந்துரை பட்டியலில் இந்திய படங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இந்தியா சார்பில் 2026 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட `ஹோம்பவுண்ட்' திரைப்படம் இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெறவில்லை. பெறும் வரவேற்பையும் பல சர்வதேச திரைப்பட விருதுகளையும் பெற்றிருந்த இப்படம் ஆஸ்கர் விருதுகள் பட்டியலில் இடம்பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இப்பட்டியலில் எஃப் 1, ஃபிராங்கண்ஸ்டைன், ஹாம்நெட் உள்ளிட்ட 10 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆஸ்கர் விருதுகளில் அதிகப்படியான பிரிவுகளில் போட்டியில் உள்ள திரைப்படம் என்ற சாதனையை Sinners திரைப்படம் படைத்துள்ளது. 16 பிரிவுகளில் போட்டியில் உள்ள இத்திரைப்படம் முன்னதாக 14 பிரிவுகளில் போட்டியில் இருந்த All About Eve, Titanic மற்றும் La La Land ஆகிய படங்களின் சாதனையை Sinners முறியடித்துள்ளது. சிறந்த இயக்குநருக்கான நாமினேஷன் பட்டியலில் ஹாம்நெட் பட இயக்குநர் சோலே ஜாவோ, மார்ட்டி சுப்ரீம் பட இயக்குநர் ஜோஷ் சாஃப்டி உள்ளிட்ட 5 இயக்குநர்கள் இடம்பெற்றுள்ளனர்.


