SIR விவகாரம்- திமுகவினர் திட்டியதால் அரசு ஊழியர் தற்கொலை

 
suicide suicide

திருக்கோவிலூர் அருகே SIR படிவம் குறைந்த அளவு பூர்த்தி செய்ததாகவும் கூறி திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததால் கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

suicide

தமிழ்நாடு முழுவதும் SIR எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தம் நடைபெற்று வருகிறது. இந்த படிவம் வழங்குதல், திருத்தி மீண்டும் பெறப்படும் நிகழ்வுகளுக்கு அங்கன்வாடி ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சிவனார்தாங்கல் கிராமத்தின் கிராம உதவியாளராக பணியாற்றும் ஜாஹிதா பேகம்(38) என்பவர் சிவனார்தாங்கல் கிராமத்தில் 80 படிவங்கள் மட்டுமே கொடுத்து பெற்றுள்ளதாக கூறி திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் அவருக்கு அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. 

இதன் காரணமாக இன்று மதியம் தன்னுடன் பணியாற்றும் சக கிராம உதவியாளர் அவர்களுக்கு தொடர்பு கொண்டு இது போன்று தன்னை திமுக நிர்வாகிகள் அதிகாரிகள் படிவம் குறைந்த அளவு வழங்கியதாக கூறி திட்டுவதாக கூறியுள்ளார். அதன் பின்னர் மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் உயிரிழந்த ஜாஹித்தாபேகத்தின் உடலை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து, அதன் பின்னர் உடற்கூறு ஆய்விற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.