வீட்டுக்குள் புகுந்த அரசுப் பேருந்து- இருவர் பலி
சீர்காழி அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மதில் சுவரை உடைத்து கொண்டு உள்ளே புகுந்து வீட்டின் மீது மோதி நின்றது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் அரசு பேருந்து வழக்கம் போல காலை சிதம்பரத்தில் பயணிகளை ஏற்றி கொண்டு நாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பொழுது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் கடை வீதியில் மாதானத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் கடையில் டீ வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சாலையை கடந்துள்ளார் அப்பொழுது வேகமாக வந்த பேருந்து அவர் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பிய போது சேகர் சங்கர் மீது மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்துக் கொண்டு வீட்டிற்குள் மோதி நின்றது, அப்பொழுது வீட்டிற்கு குப்பைகளை சேகரிக்க வந்த தூய்மை பணியாளர் சரண்யா மீதும் பேருந்து மோதி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே சித்ரா உயிர் இழந்தார் பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் பேருந்து ஓட்டுனர் பேருந்தை விட்டு தலைமறைவாகி விட்டனர் கொள்ளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்,தகவலறிந்து 108 வாகனம்,தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இறந்த சரண்யாவின் உடலை மீட்டனர்.


