கொசு உற்பத்தியை தடுக்கும் எஸ்.ஐ.டி. ஆய்வு - சாதித்த தமிழர்

 
Sterile Insect Technique

கொசு பிரச்சனை உலகம் முழுவதும் இருக்கிறது. அமெரிக்கா,  சீனா உள்ளிட்ட நாடுகள் கொசுக்களை அழிக்க, கொசு உற்பத்தியை தடுக்க விஞ்ஞான முறையில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  எஸ்.ஐ.டி (Sterile Insect Technique) என்கிற மலட்டு பூச்சி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நடைமுறை அமெரிக்கா மற்றும் சீனாவில் உள்ளது.

 இதுகுறித்து சீனாவின் ஐ.எல்.ஏ.எஸ்-ல் நடந்த  எஸ்.ஐ.டி  தொழில்நுட்ப ஆய்வில்  தமிழகத்தின்  சங்கரன் கோவிலை சேர்ந்த ராமசாமி ராஜேஷ்குமார் என்கிற அணு வேளாண் உயிர் தொழில் நுட்பவியல்  விஞ்ஞானி பங்கேற்று சாதித்திருக்கிறார். 

r

உலகம் முழுவதும் ஒரு பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது கொசு. இந்த கொசுவினால் ஏற்படும் பாதிப்புகளை சொல்லி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. அதனால்தான் அமெரிக்கா , சீனா உள்ளிட்ட நாடுகள் எஸ். ஐ. டி தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வருகின்றார்கள்.  இந்தியாவும் இந்த ஆய்வுகள் மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 அவர் மேலும்,   எஸ்.ஐ.டி .  தொழில்நுட்பத்தின் மூலம் ஆண் கொசுக்களை தனியாக வளர்த்து அவற்றுக்கு கதிர்வீச்சின்  மூலம்  கருத்தடை செய்யப்படுகிறது.  இதனால் மலட்டுத்தன்மையுடன் உருவாகும் ஆண் கொசுக்களை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் விட்டு அங்குள்ள பெண் கொசுக்களுடன் இனப்பெருக்க செய்யப்படுகிறது.   கதிர்வீச்சு மூலம் கருத்தடை செய்யப்பட்டிருப்பதால் கொசு இனப்பெருக்கம் தடை செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

கொசு உற்பத்தியை தடுப்பதில் இதுபோன்ற ஆய்வுகள் இந்தியாவிற்கும் அவசியம்.   இதுகுறித்து  ஆய்வுகளை நடத்தும் நிறுவனங்களூக்கு மத்திய மாநில அரசுகள் ஊக்குவிப்பு அளிக்க  வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.