3-வது குழந்தைக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்! என்ன பெயர் தெரியுமா?

 
சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மூன்றாவது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் வேலை செய்துகொண்டிருந்தபோதே தனது உறவுக்கார பெண்ணான ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் உள்ளனர். 


இந்நிலையில் கடந்த மாதம் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பவன் சிவகார்த்திகேயன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெயர் சூட்டு விழா சிவகார்த்திகேயனின் இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடந்து முடிந்துள்ளது. பெயர் சூட்டும் விழாவின் வீடியோவை தனது எக்ஸ்  தளத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.