சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து - 3 பேர் பலி!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளர்கள் பலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. எம்.புதுப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது
பட்டாசு விபத்தில் படுகாயம் அடைந்த 3 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையின் தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


