ஒரே முகவரியில் 6 நிறுவனங்கள்.. வைத்திலிங்கத்தின் அசோக் நகர் அலுவலத்தில் 3 காத்திருந்து அதிகாரிகள் ரெய்டு...
3 மணி நேரம் காத்திருந்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் அசோக் நகர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், கட்டுமான நிறுவனத்திடம் இருந்து 27.90 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த செப்.19ம் தேதி வைத்திலிங்கம், அவரது மகன் பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தல், முறைகேடான பண பரிவர்த்தனை போன்ற புகார்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று(23 ம் தேதி) காலை சுமார் 7:30 மணிக்கு வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள தெலுங்கன்குடிகாட்டில் உள்ள அவரது வீடு மற்றும் 5 கார்களில், 11 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வைத்திலிஙத்தின் மகன்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் சென்னை சேப்பாக்கம் எம்.எல்.ஏ விடுதியில் அமைந்துள்ள அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ விடுதி அறையில் இல்லை. இருந்தபோதிலும் எம்எல்ஏ விடுதி நிர்வாகத்திடம் சாவி வாங்கி, அவரது அறையை சோதனையிட்டு வருகின்றனர்
மேலும், சென்னை அசோக் நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான 6 நிறுவனங்கள் ஒரே இடத்தில் செயல்பட்டு வருகின்றன. சென்னை அசோக் நகர் 10 -வது அவென்யூவில் வைத்தியலிங்கம் மற்றும் அவரது குடும்பத்திற்கு சொந்தமான ஆறு நிறுவனங்கள் ஒரே முகவரியில் செயல்படுகிறது. இங்கு விகாஷ் மந்த்ரா பிராப்பர்ட்டீஸ் & இன்ஃப்ராக்சர் லிமிட், எம்.ஆர்.வி இன் பிரைவேட் , முத்தம்மாள் ஸ்டேட் பிரைவேட் லிமிடெட் , வி.பி. எண்டர்பிரைசஸ், விகாஷ் பிரைம் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், ஸெஸ்ட் பில்டக் பிரைவேட் லிமிடெட், எம்.ஆர் எஜுகேஷனல் & சோசியல் டிரஸ்ட், ஆகிய ஆறு நிறுவனங்கள் செயல்படுகின்றன
இந்த அலுவலகத்தில் சோதனை நடத்த வருவதாக தகவல் தெரிவித்தும், அலுவலகத்தை திறக்க ஊழியர்கள் யாரும் வராததால் அதிகாரிகள் வந்த அதிகாரிகள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். பின்னர் ஊழியர்களிடம் சாவி எடுத்துவரப்பட்டு கதவு திறப்பட்டது. இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.,


