விஜய்மீது செருப்பு, தேங்காய் வீச்சு.. அதிர்ச்சி காட்சிகள் வெளியீடு!
தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின்போது, கூட்ட நெரிசல் ஏற்றப்பட்ட காட்சிகளும், அச்சமயத்தில் அவர்மீது செருப்பு, தேங்காய் வீசப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன
கரூர் துயர சம்பவத்திற்கு நான்காவது நாளில் , விஜய் காணொளி ஒன்றை வெளியிட்டு தனது கருத்தை வெளிப்படுத்தினார்.அதில், 5 மாவட்டங்களில் நல்ல முறையில் பரப்புரை நடந்தது. ஆனால் கரூர் மாவட்டத்தில் மட்டும் இப்படி நடக்கக் காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் சீயம் சார் என்னைப் பழி வாங்க வேண்டும் என்றால் என்னை எதாவது செய்து கொள்ளுங்கள் . ஆனால் அப்பாவி மக்கள் மற்றும் தவெக தொண்டர்களை எதுவும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைச் சுற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "விஜய் மேடையில் பேச்சை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே கூட்டத்தில் மயக்கம், செருப்பு வீசுதல் போன்ற சம்பவங்கள் நடந்தன. குறிப்பாக அவர் பேச்சைத் தொடங்கிய 5வது நிமிடத்திலேயே கூட்டத்தில் முதல் பிரச்சனை ஏற்பட்டது. அதன்பின் சில நிமிடங்களில் பிணியூர்தி அழைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். மொத்தம் விஜய் சுமார் 19 நிமிடங்கள் மட்டுமே பேசினார்.
ஆனால் அந்தப் பேச்சின் ஆரம்பத்திலேயே சம்பவங்கள் நடந்திருந்த போதிலும், தற்போது சமூக வலைத்தளங்களில் நேரத்தை மாற்றி, உண்மையை மறைத்து, அரசின் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் வகையில் சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்," என்று அவர் தெரிவித்தார்.இந்த நிலையில் தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின்போது, கூட்ட நெரிசல் ஏற்றப்பட்ட காட்சிகளும், அச்சமயத்தி அவர்மீது செருப்பு, தேங்காய் வீசப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சமீபத்தில் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது, நெரிசல் மிகுந்த அந்தச் சூழலில் அவர் மீது செருப்புகளும் தேங்காய்களும் வீசப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.
தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின்போது, கூட்ட நெரிசல் ஏற்றப்பட்ட காட்சிகளும், அச்சமயத்தில் அவர்மீது செருப்பு, தேங்காய் வீசப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன#TVK #Karur #karurtragedy #TVKCampaign pic.twitter.com/JeG0GPw7md
— PttvOnlinenews (@PttvNewsX) October 2, 2025
தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின்போது, கூட்ட நெரிசல் ஏற்றப்பட்ட காட்சிகளும், அச்சமயத்தில் அவர்மீது செருப்பு, தேங்காய் வீசப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன#TVK #Karur #karurtragedy #TVKCampaign pic.twitter.com/JeG0GPw7md
— PttvOnlinenews (@PttvNewsX) October 2, 2025


