சென்னை-பெங்களூரு டபுள் டெக்கர் ரயிலில் இருந்து திடீரென வெளியேறி புகை - பயணிகள் அதிர்ச்சி

 
train

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சென்னை-பெங்களூரு டபுள் டெக்கர் ரயிலில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு டபுள் டெக்கர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் சென்னையில் இருந்து இந்த ரயில் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது இந்த ரயிலின் சி-6 பெட்டியில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதனை சுதாரித்துக்கொண்ட ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நடுவழியில் நிறுத்தினார். மேலும் இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே அதிகாரிகள் புகை வந்த பெட்டியை ஆய்வு செய்தனர். அதில், பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகை வெளியேறியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் ரயிலில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்தனர். இதனையடுத்து மீண்டும் அந்த ரயில் பெங்களூரு நோக்கி புறப்பட்டது. ரயில் இருந்து திடீரென புகை வந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரயில் ஓட்டுநர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு ரயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.