ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏ.சி.யில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு!

 
smoke smoke

கோவையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏசியில் இருந்து கரும்புகை வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதேபோல் இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அனைவரும் எழுந்து நின்று தமிழ் தாய் வாழ்த்து பாடலை பாடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில், நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த அரங்கத்தில் பொறுத்தப்பட்டிருந்த ஏசியில் இருந்து திடீரென பயங்கர சப்தத்துடன் கரும்புகை வெளியேறியது. 

smoke

இதனால் அந்த அரங்கம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏசியின் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் நிகழ்ச்சி மீண்டும் தொடங்கியது. கோவையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏசியில் இருந்து கரும்புகை வெளியேறிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏசியில் இருந்து கரும்புகை வெளியேற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.