புகைபிடிப்பவர்கள் ஷாக்..! அதிரடியாக உயர்ந்த சிகரெட் விலை..!
சிகரட் ஒன்றின் விலை அவற்றின் வகைகளுக்கு ஏற்ப 3, 5, 10 ரூபாய் உயர்ந்துள்ளது.
உடலுக்கு தீங்கான பொருட்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள பெரும்பாலான பொருட்களுக்கு தற்போது 28 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில் இனி 40 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது. அவற்றில் சிகரெட்டும் ஒன்று. இதற்கு முன் சிகரெட்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. இனி அவைகளுக்கு 40 சதவீத வரி விதிக்கப்படும். இதனால் ரூ.19 ஆக இருக்கும் சிகரெட் விலை ரூ.22 வரை உயரக் கூடும். ரூ.10 ஆக உள்ள சிகரெட் விலை ரூ.11 ஆக அதிகரிக்கும்.
40 சதவீத ஜி.எஸ்.டி வரி வரம்பிற்குள் இடம்பெறும் பொருட்கள் என்னென்ன?
- பான் மசாலா
- சிகரெட்கள்
- குட்கா
- சுவிங் டொபாக்கோ
- புகையிலை பொருட்கள்
- சிகர்ஸ், சிரூட்ஸ், சிகரில்லோஸ் போன்ற புகையிலைக்கு மாற்றான பொருட்கள்
- சர்க்கரை சத்துகள் நிறைந்த குளிர்பானங்கள்
- கார்பனேடட் பழச்சாறு
- ஆன்லைன் சூதாட்டம் அல்லது விளையாட்டுகள்
- கஃபைன் நிறைந்த பானங்கள்
சாதாரண மக்கள் பயன்படுத்தும் அன்றாடப் பொருட்களான ஹேர் ஆயில், கழிவறையில் பயன்படுத்தப்படும் சோப் பார்கள், ஷாம்பூ, டூத் பிரஸ், டூத் பேஸ்ட், சைக்கிள், டேபிள் வேர், கிச்சன் பொருட்கள் மற்றும் இதர வீட்டு உபயோகப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வந்த 18 அல்லது 12 சதவீத வரியானது ஜி.எஸ்.டி 2.0ன் கீழ் வெறும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
UHT எனப்படும் உயர்வெப்ப கொதிநிலை பால், பேக்கிங் செய்யப்பட்ட பன்னீர், அனைத்து வகையான இந்திய பிரட்களுக்கும் ஜிஎஸ்டி 5 சதவீதமாக இருந்து வந்தது. இனிமேல் இந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டியே இல்லை


