இதுவரை 2,500 போலி பாத்திரங்கள் ரத்து - அமைச்சர் மூர்த்தி தகவல்!!

 
Moorthi

6 மாதங்களில்  பத்திரப்பதிவுத்துறை மென்பொருள் 3.0 நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

போலி ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரம் பதிவு துறைக்கு வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக மோசடியாக ஆவண பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்யும் ஆணையை கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். போலியான ஆவணப் பதிவுகளை ரத்து செய்தல் மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவு சட்டம் 1908ல்,  பதிவு செய்த அலுவலருக்கோ அல்லது வேறு எந்த உயர் அலுவலருக்கோ இதுவரை அதிகாரம் அளிக்கப்படவில்லை . எனவே அந்த ஆவண பதிவுகளை ரத்து செய்திட பாதிக்கப்பட்டோர்  நீதிமன்றங்களை அணுகிட வேண்டிய நிலை இருந்தது.

tn

 எனவே பொதுமக்களின் நலனை கருதி தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி பதிவு சட்டம் 1908ல்   போலி ஆள் மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பதிவுத்துறையை ரத்து செய்ய அதிகாரம் அளிக்க சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது இந்த நடைமுறை அமலாக்கப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, "போலி பத்திரங்களை ரத்து செய்ய 14,000 மனுக்கள் பெறப்பட்டுள்ளது;இதுவரை 2,500 போலி பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது; 6 மாதங்களில்  பத்திரப்பதிவுத்துறை மென்பொருள் 3.0 நடைமுறைக்கு கொண்டு வரப்படும்" என்றார்.