யாரோ சில விஷமிகள் இதுபோன்ற போஸ்டரை ஒட்டியுள்ளனர் - ஆனந்த் பேட்டி
Mar 28, 2025, 10:22 IST4:52:05 AM

யாரோ சில விஷமிகள் இதுபோன்ற போஸ்டரை ஒட்டியுள்ளனர் என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. த.வெ.க பொதுக்குழு கூட்டத்தையொட்டி, சென்னை ஈ.சி.ஆரில் ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை ஏற்பட்டது. அந்த போஸ்டரில் வருங்கால முதல்வர் பொதுச்செயலாளர் ஆனந்த் என்ற வாசகம் இடம்பெற்றதால் தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர்.
இந்த நிலையில், வருங்கால முதலமைச்சர் என போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பான கேள்விக்கு, இந்த கேள்வியை என்னிடம் கேட்கலாமா என தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் பதில் அளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் நான் சாதாரண தொண்டன், யாரோ சில விஷமிகள் இதுபோன்ற போஸ்டரை ஒட்டியுள்ளனர் என கூறினார்.