தினமும் குடித்துவிட்டு வந்த மகனை பெற்றோர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை

 
suicide

மதுவுக்கு அடிமையாகி நாள்தோறும் குடித்துவிட்டு வருவதை பெற்றோர் கண்டித்ததால் குடிபோதையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.                            

suicide

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட தெய்வேந்திரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யர். இவரது இளைய மகன் விஜய் (வயது 28). தனியார் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வரும் இவர், கடந்த சில மாதங்களாக மது போதைக்கு அடிமையாகி நாள்தோறும் வீட்டிற்கு செல்லும் பொழுது மது குடித்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் தொடர்ந்து கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அதிக அளவில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற விஜயை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மது போதையில் இருந்த இளைஞர் விஜய் அவரது அறைக்குள் சென்று கதவை தாளிட்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து வந்த பெரியகுளம் காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதைக்கு அடிமையான இளைஞரை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.