சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

 
sonia sonia

உடல்நலக் குறைவால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வயிறு சம்பந்தமான உபாதை காரணமாக சோனியா காந்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வயிறு சம்பந்தமான உபாதை காரணமாக சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் டெல்லி கங்காராம் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சோனியா காந்தி விரைவில் நலம் அடைந்து வீடு திரும்ப வேண்டும் என தலைவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.