திருப்பதியில் வரும் 23ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படும்

 
tirupati

திருப்பதியில் வரும் 23ம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

tn

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. இது மார்கழி மாதத்தில் வரும். வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர். திருவரங்கம் கோவிலில் இந்நாளின் முந்தைய பத்து நாட்களில் "பகல்பத்து" என்றும் பிந்தைய பத்து நாட்களில் "இராப்பத்து" என்றும் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது.

tirupathi


 இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதேசியை ஒட்டி வரும் 23ம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி வரை இது திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது; இதற்காக ₹300 விலையிலான தரிசன டிக்கெட் வரும் 10ம் தேதி ஆன்லைனில் வெளியாகிறது.