இந்த எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேரமாக ரத்து - தெற்கு ரயில்வே..!

 
1

திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சென்னை எழும்பூரில் இன்று(ஏப்ரல் 4) காலை 9:45 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16127) எர்ணாகுளம் - குருவாயூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

மறு மார்க்கமாக குருவாயூரிலிருந்து நாளை(ஏப்ரல் 5) இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16128), குருவாயூரிலிருந்து புறப்படுவதற்கு பதிலாக எர்ணாகுளத்தில் இருந்து ஏப்ரல் 6ம் தேதி அதிகாலை 1:20க்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.