ஏப்ரல் 15 முதல் ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே..

 
ஏப்ரல் 15 முதல் ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே..

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே ஏப்ரல் 15ம் தேதி முதல் சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நாள்தோறும்  நீலகிரிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மலைகள், மலை முகடுகள், அருவிகள் மற்றும் பல்வேறு குகைகளை தாண்டி செல்லும் இதமான இயற்கை எழில் கொஞ்சும்  பயணத்திற்காக பல்வேறு மாநிலங்கள், நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள். இந்தநிலையில் ஊட்டியில் தற்போது குளுகுளு சீசன் துவங்கியுள்ளதாலும்,  கோடை விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும்.

ஏப்ரல் 15 முதல் ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே..

ஆகையால் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே கோடை கால சிறப்பு மலை ரயிலை இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் ரயில்வே நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைக்கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே சிறப்பு மலை ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் , “மேட்டுப்பாளையத்தில் இருந்து ஏப்.15ம் தேதி முதல் ஜூன் 24ம் தேதி வரை 11 ட்ரிப் சனிக்கிழமைகளிலும், மறுமார்க்கமாக ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஏப்.16 முதல் ஜூன் 25ம் தேதி வரை 11 ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 9.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் இந்த சிறப்பு மலை ரயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடையும். அதேபோல், ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் மலை ரயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.