பெண்கள் மாமனார், மாமியாரை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் - சௌமியா அன்புமணி
திருமணம் ஆகும் மணப்பெண்கள் தாய் தந்தையர் மற்றும் மாமனார் மாமியாரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என சௌமியா அன்புமணி ராமதாஸ் அறிவுரை வழங்கினார்.

பசுமை தாயகத்தின் மாநில தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி ராமதாஸ் பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் பாமக பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமகனுக்கு தாலி எடுத்துக் கொடுத்தார். மணமகன் தாலி கட்டினார். பின்பு மணமக்களுக்கு அறிவுரையும் வழங்கினார். அதாவது திருமணம் ஆகும் மணப்பெண்கள் தாய், தந்தையர் மற்றும் மாமனார், மாமியாரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என சௌமியா அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தினார். மேலும் ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
பின்னர் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை விரட்டீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்பம் சாத்தி மரியாதை செலுத்தினார்கள். பின்பு விரட்டீஸ்வரர் பெரியநாயகி அம்மன் ஆகியோரை தரிசனம் செய்தார். அவருக்கு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்பு கோயில் அர்ச்சகர்கள் மலர்மாலை அணிவித்தும் சால்வை அணிவித்தும் பிரசாதங்கள் வழங்கி கௌரவித்தனர். திருமண விழாவிற்கு சென்ற பொழுது வெள்ளை குதிரைகள் காலை உயிரை உயர்த்தி சௌமியா அன்புமணி ராமதாஸ் அவர்களை வரவேற்றது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


