தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றி புகழ்வோம்!!

 
tn

சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றி புகழ்வோம் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

ttv dhinakaran

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என முழங்கி தாய்நாடு மீது பற்றும் தமிழ் மக்கள் மீது அன்பும் கொண்டிருந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று.

tn

எளிய சொற்கள், கவர்ந்திழுக்கும் தலைப்புகள், கருத்துப் படங்களை உள்ளடக்கிய தமிழர்களுக்கென தனி பத்திரிகையை தொடங்கி தமிழ் இதழியல் முன்னோடியாக திகழ்ந்ததோடு சட்டப்பேரவை தலைவராகவும் அமைச்சராகவும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றி புகழ்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.