மக்கள் விரோத ஆட்சியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டை விரைவில் மீட்போம் - எஸ்.பி.வேலுமணி

 
velumani velumani

மக்கள் விரோத அரசான விடியா திமுக ஆட்சியில் சிக்கியுள்ள நம் தமிழ்நாட்டை விரைவில் மீட்போம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட நாளான நவம்பர் 1ஆம் தேதியை, "தமிழ்நாடு நாள்" என்று மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் தலைமையிலான கழக அரசு அறிவித்ததை பெருமிதத்துடன் நினைவுகூர்ந்து, அனைவருக்கும் இனிய #தமிழ்நாடுநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


மக்கள் விரோத அரசான விடியா திமுக ஆட்சியில் சிக்கியுள்ள நம் தமிழ்நாட்டை விரைவில் மீட்டு, மாண்புமிகு அன்னன் திரு. #எடப்பாடியார் அவர்கள் தலைமையில் "வான்புகழ் கொண்ட" தமிழ்நாடாக மீண்டும் மிளிரச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.