மருத்துவமனை வளாகம் அருகே கார் ரேஸ்க்கான ஸ்பீக்கர்! உதயநிதி பிறப்பித்த அதிரடி உத்தரவு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வான "சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்" 30.08.2024 முதல் 01.09.2024 வரை சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெற்றுவருகிறது. கார் ரேஸ் நடைபெறும் பகுதிக்கு அருகே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனை உள்ளது.
இந்நிலையில் மருத்துவமனை வளாகம் அருகே அதிக ஒலி எழுப்பக்கூடாது என்ற விதியை கூட மதிக்காமல் கார் ரேஸுக்கான ஸ்பீக்கர் ஒலித்துக்கொண்டு இருந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி திமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
மருத்துவமனை வளாகம் அருகே அதிக ஒலி எழுப்பக்கூடாது என்ற விதியை கூட மதிக்காமல் கார் ரேஸுக்கான ஸ்பீக்கர் ஒலித்துக்கொண்டு இருக்கிறது!
— Er.V.Thiyagarajan VRT-Say No To Drugs & Dmk (@thiyaga15818266) August 30, 2024
இந்த #விடியா_திமுகமாடல் அரசுக்கு மக்கள் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது ! #ADMK_TNJ pic.twitter.com/ulZ6byGGS1
— தூய துறவி (@VSK_Talks) August 30, 2024
மருத்துவமனை உள்ளே எந்த சத்தமும் இல்லை 😵💫
ஏன்டா இப்படி பித்து புடிச்சு அலையுற? pic.twitter.com/f3PMoTTs6o
இந்நிலையில் கார் ரேஸ் வழித்தடத்தில் வைக்கப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகளில் இருந்து வரும் சத்தம் ஓமந்தூரார் மருத்துவமனைக்குள் எதிரொலிக்காத போதிலும் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மருத்துவமனைக்குள் வெளிப்புற சத்தம் எதுவும் வராத வகையில் Sound Proofing அமைக்கப்பட்டுவருவதாகவும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.