தொடர் விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு
Updated: Jun 13, 2024, 11:56 IST1718259980220
பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

வார விடுமுறை மற்றும் பக்ரீத்தை முன்னிட்டு 1300 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. www.tnstc.in மற்றும் tnstc செயலி மூலம் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

வரும் 14,15,16 ஆகிய தேதிகளில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டத்துக்கு கூடுதலாக 1270 பேருந்துகளும், 17ம் தேதி பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு 705 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.


