10ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 25ல் திறனாய்வு தேர்வு

 
School Education

10ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு ஜனவரி 25ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது.  இத்தேர்வில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1000 மாணாக்கர்கள் (500மாணவர்கள், 500 மாணவியர்கள்) தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகையாக மாதம் ₹1000 வழக்கப்படும்.

மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை நவ.30 முதல் டிச.9 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிசம்பர் 9ம் தேதிக்குள், மாணவர்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.