சபரிமலையில் நடைபெற்ற சிறப்பு பூஜை.. பிரசாதமாக வழங்கப்பட்ட நெற்கதிர்கள்..

 
சபரிமலை ஐய்யப்பன் கோயில்

சபரிமலை  கோயிலில் இன்று அதிகாலை நடைபெற்ற நிறைபுத்தரிசி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.  இந்த நிகழ்வில் பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர்கள் வழங்கப்பட்டன.  
 
புகழ்பெற்ற கேரள மாநிலம் சபரிமலையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் நிறைபுத்தரிசி  சிறப்பு பூஜை விமரிசையாக நடைபெறுவது வழக்கம். விவசாயம் செழிக்கவும், மக்களின் வறுமை நீங்கவும், உலக மக்களின் பசி. பஞ்சம் தீரவும் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் வருடந்தோறும் இந்த பீஜை நடத்தப்படும்.  அந்தவகையில்  இந்த ஆண்டுக்கான நெல் புத்தரி சிறப்பு பூஜை  இன்று அதிகாலை நடைபெற்றது.  காலை  5:45 மணிக்கு தொடங்கிய பூஜையானது 6.30 மணி வரை  வரை நடைபெற்றது. சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.  

சபரிமலை

கேரளாவின் பல மாவட்டங்களில் இருந்து  விவசாயிகளால் விளைவிக்கப்பட்ட நெல் கதிர்களை பக்தர்கள் சபரிமலைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த கதிர்களை சன்னிதானத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.  பின்னர் சபரிமலைக்கு வந்திருந்த பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.  தொடர்ந்து இன்று  இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி கோயில் நடை அடைக்கப்பட உள்ளது.