#BREAKING முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டத்திற்கு ரூ.41.35 கோடி

 
mrk

2024-25 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அவை பின்வருமாறு:- 

  • 12,500 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி விரிவாக்க திட்டம்!
  • ரூ.32.9 கோடி மானியத்தில் வாடகை இயந்திரங்கள்
  • ராமநாதபுரம், சிவகங்கையில் மிளகாய் பயிர் ஊக்குவிப்பு திட்டம்

mrk

  • மண்புழு உரப்படுக்கை அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
  • எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட 45 கோடி நிதி ஒதுக்கீடு! 12,500 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்படும் 
  • சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருதுகளை வழங்க ₹5 லட்சம் ஒதுக்கீடு!
  • முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த ரூ.41.35கோடி ஒதுக்கீடு 
  • ஏற்றுமதிக்கு உகந்த மா ரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி ஒதுக்கீடு

mrk

  • பலாவில் உள்ளூர், புதிய ரகங்களின் சாகுபடி, பலா பதப்படுத்தும் கூடங்கள் அமைக்க ரூ.1.14 கோடி; வாழை பரப்பு விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.12.73 கோடி ஒதுக்கீடு
  •  பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ₹50 லட்சம் நிதி ஒதுக்கீடு!
  • விதை மரபணு தூய்மையை உறுதி செய்ய கோவையில் ஆய்வகம்!
  • வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ₹2 கோடி நிதி ஒதுக்கீடு!
  • ஆடாதொடா, நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்களை வளர்த்திட ₹1 கோடி ஒதுக்கீடு!
  • மண் வளத்தைக் காக்க ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டம் அறிமுகம்!
  • மண் பரிசோதனைக்கு ₹6.27 கோடி  நிதி ஒதுக்கீடு!
  • 10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ₹6 கோடி மானியம்