மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

 
train train

மகா சிவராத்திரியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சில சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. 

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், * விழுப்புரத்தில் இருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை), நாளை(திங்கட்கிழமை) ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில்(வண்டி எண்.06130), அதேநாள் காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமார்க்கமாக, திருவண்ணாமலையில் இருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை), நாளை(திங்கட்கிழமை) ஆகிய தேதிகளில் மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்(06129), அதேநாள் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

* விழுப்புரத்தில் இருந்த இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு வேலூர் செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்(06167), மறுநாள் அதிகாலை 1.45 மணிக்கு வேலூர் சென்றடையும். மறுமார்க்கமாக, வேலூரில் இருந்த இன்று(ஞாயிற்றுக்கிழமை), நாளை(திங்கட்கிழமை) ஆகிய தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்(06168), அதேநாள் அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

Advertisement

* விழுப்புரத்தில் இருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை), நாளை(திங்கட்கிழமை) ஆகிய தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்(06049), அதேநாள் மதியம் 1.05 மணிக்கு காட்பாடி சென்றடையும். மறுமார்க்கமாக, காட்பாடியில் இருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை), நாளை(திங்கட்கிழமை) ஆகிய தேதிகளில் மதயிம் 1.20 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்(06050), அதேநாள் மாலை 5.10 மணிக்கு விழுப்புரம் சென்றடையும் எனக் கூறப்பட்டுள்ளது.