கோடை விடுமுறை...! தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில்!
Apr 22, 2025, 14:20 IST1745311835467
கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை விடப்பட்டு வருகிறது. விடுமுறையை கொண்டாட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றன. மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக மத்திய, மாநில அரசுகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கோடை விடுமுறையையொட்டி தாம்பரம், திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஏப்.29ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை இருமார்க்கத்திலும் வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கபடுகிறது. திருச்சியில் இருந்து அதிகாலை 5.35க்கு புறப்படும் ரயில் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரத்தில் இருந்து மதியம் 3.45க்கு புறப்படும் ரயில் இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


