முருகனின் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

 
tn

முருகனின் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலாவுக்கு மூத்த குடிமக்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்.

palani

முருகனின் அறுபடை வீடுகளுக்கு மூத்த குடிமக்கள் ஆன்மீக சுற்றுலா செல்ல இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. தமிழ் கடவுளான முருகப்பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஸ்தலங்களுக்கு மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் செல்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளை அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது .

sekar babu

அதன்படி 60 முதல் 70 வயது உட்பட்ட 200 பேரை ஆண்டுக்கு ஐந்து முறை அதாவது ஆயிரம் பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைக்க இந்து சமய அறநிலையத்துறை புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.  இதற்காக வரும் ஜனவரி 28ஆம் தேதி முதல் கட்ட அறுபடை வீடு ஆன்மீக சுற்றுலா பயணம் தொடங்குகிறது. இதற்கான விண்ணப்பத்தை அறநிலையத்துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் . தகுதியுடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட பயணத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள். ஏனைய தங்களுடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மீகப் பயணங்களில் அழைத்துச் செல்ல முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.