"சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும்”- எஸ்.பி.வேலுமணி

 
"சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும்”- எஸ்.பி.வேலுமணி

சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என எம்.எல்.ஏ.எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியதே சசிகலாதான். கட்சியில் இப்போது உள்ளவர்களை குறை சொல்லி வெளியே அனுப்பக்கூடாது. அதிமுகவை நாங்கள் பிரிக்க விரும்பவில்லை. வெளியே சென்றவர்களை ஒன்றுசேர்த்து கட்சியில் இணையுங்கள். இனியாவது எல்லோரையும் அரவணைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும். முன்னதாக ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பிரிந்து சென்றபொதே நாங்கள் அதனை எதிர்த்தோம். தேர்தலை சந்திக்கும் முன்பே கட்சியை ஒன்றிணைக்க  வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினோம். அதிமுக எங்கள் உயிர்மூச்சு. நாங்கள் எப்படி கட்சியை உடைக்க நினைப்போம். அவதூறு பரப்புகிறார்கள். உடைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல” என்றார்