"திமுக ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை, சபரீசன் கையில் உள்ளது"- திமுகவிலிருந்து விலகிய முக்கிய புள்ளி

 
ச்

திமுக நிர்வாகியும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளருமாக இருந்த மதுரையைச் சேர்ந்த எஸ் ஆர் கோபி இன்று   எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஏற்கனவே மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததை அடுத்து மதுரையின் முக்கிய திமுக முகமாக விளங்கிய எஸ்.ஆர் கோபியும் இன்று தனது ஆதரவாளர்களுடன் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

Image


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ் ஆர் கோபி கூறுகையில் , “25 ஆண்டுகளாகத் திமுகவிற்காக உழைத்தோம். தகுதி இல்லாதவர்களுக்குப் பதவிகள் வழங்கப்படுகின்றனர், ஆனால் உண்மையாக உழைப்பவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தற்போது திமுக கட்சி முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை. அது சபரீசன் மற்றும் அவரது தரப்பினரின் கைகளில்தான் உள்ளது. அவர்களின் ஆய்வுகளும் குறுக்கீடுகளுமே கட்சியை வழிநடத்துகின்றன. திமுகாவில் எல்லோரையும் போல் பதவியை தான் எதிர்பார்த்தேன். ஆனால் திமுகவில் உண்மை உழைப்பு விசுவாசத்திற்கு மதிப்பில்லை என்பதால் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டேன். நிர்வாகச் சிக்கல்களால் மதுரை மேயர் மற்றும் மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத பலவீனமான நிலையில் தலைமை உள்ளது. இது எனது தனிப்பட்ட முடிவு, அழகிரி அண்ணன் மீது எப்போதும் அன்பு உண்டு. அவர் நட்புக்கு இலக்கணமானவர். ஆனால் அரசியலில் எனது பாதை இன்று மாறியுள்ளது” எனக்  கூறினார்.