“கைகூப்பி கேட்டுகொள்கிறேன்..”- நடிகை ஸ்ரீலீலா பதிவு

 
ச் ச்

AI-ல் உருவாக்கப்படும் தவறான விஷயங்களை ஆதரிக்க வேண்டாம் என நடிகை ஸ்ரீலீலா கேட்டுக்கொண்டுள்ளார்.

Image

இதுதொடர்பாக நடிகை ஸ்ரீலீலா தனது சமூக வலைதள பக்கத்தில், “AI-ல் உருவாக்கப்படும் தவறான விஷயங்களை ஆதரிக்க வேண்டாம். தொழில்நுட்பத்தை நன்மைக்கும் தவறான முறையில் பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. இது என்னை மனதளவில் மிகவும் பாதித்துள்ளது. கைக்கூப்பி கேட்டுக்கொள்கிறேன். AI மூலம் உருவாக்கப்படும் அபத்தமான விஷயங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். என் சக நடிகைகளும் இதேபோன்ற பாதிப்புகளை சந்தித்து வருவதை காண்கிறேன். ஒவ்வொரு பெண்ணும் ஒருவரின் மகள், பேத்தி, சகோதரி, தோழி அல்லது சக பணியாளர்தான். தயவு செய்து எங்களுக்கு ஆதரவாக நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தொழில்நுட்பத்தை நல்லதற்கு பயன்படுத்துவதற்கும், தவறான முறையில் பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. தொழில்நுட்பம் வாழ்க்கையை எளிமைப்படுத்ததான், சிக்கலாக்க அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.